ஜெய்ராம்ஸ் கல்லூரியில் ஹோட்டல் மேலாண்மை ஒரு நாள் பயிற்சிப்பட்டறை
கரூர் ஜெயராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஹோட்டல் மேலாண்மை& கேட்டரிங் சயின்ஸ் துறை மற்றும் முதுநிலை வேதியியல் துறை இணைந்து பேக் அன்று ரைட் என்னும் தலைப்பில் ஒருநாள் பேக்கரி பயிற்சியை நடத்தியது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி பேராசிரியர் செஃப் ரோஷன் மெர்வின் புரூஸ்லீ கலந்து கொண்டு ஸ்வீடிஷ் சாக்லேட் ஃப்ரூட் டார்ட் ஃபட்ஜி ப்ரவுனீஸ் பண்ணு வகைகள் உள்ளிட்ட பல்வேறு பேக்கரி தயாரிப்புகளை நேரடி செய்முறை மூலம் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.
கல்லூரி தாளாளர் பொறியாளர் ராமசாமி தலைமை ஏற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் லட்சுமணசிங் நிர்வாக இயக்குநர் சிவகாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த பயிற்சி வாயிலாக மாணவ மாணவியர்கள் தொழில்முறை திறன்களை வளர்த்துக்கொள்ள உதவியது. தாங்கள் தயாரித்த உணவுப் பொருட்களைக் காட்சிப்படுத்தினர். வேதியியல் துறைத்தலைவர் இலக்கியா ஹோட்டல் மேலாண்மை துறைத்தலைவர் வல்லவன் மற்றும் பேராசிரியர்கள் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். மாணவ மாணவியர்கள் பெருமளவில் பங்குகொண்டு பயனடைந்தனர்.