Event Information

வளரும் விஞ்ஞானிகளுக்கான அறிவுசார் போட்டிகள்.
Event Date

10-02-2026

Event Location

JASC Karur

Organized by

CHEMISTRY Department

About The Event

கரூர் ஜெய்ராம்ஸ் கல்லூரியில் வளரும் விஞ்ஞானிகளுக்கான அறிவுசார் போட்டிகள்.

ஜெய்ராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை வேதியியல் துறை சார்பில் ஜாஸ்க் கெம் நெக்ஸஸ் 2கே26 என்ற தலைப்பில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையே திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. வளரும் விஞ்ஞானிகளுக்கான அறிவுசார் தளமாக வடிவமைக்கப்பட்ட இந்த நிகழ்வில் மாணவ மாணவியர்கள் தங்களின் திறமைகளையும் புதுமையான கருத்துக்களையும் வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் பொறியாளர் ராமசாமி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் லட்சுமணசிங் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி நிர்வாக இயக்குனர் சிவகாமி மற்றும் பிஆர்ஓ முத்துசாமி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கில் வேதியியல்துறையில் பயிலும் மாணவர்களின் திறமையைச் சோதிக்க கல்வி மற்றும் படைப்பாற்றல் போட்டிகள் நடத்தப்பட்டன. அறிவியல் துறை சார்ந்த வினாடி வினா நினைவக விளையாட்டு ஆய்வக உபகரணங்கள் வரைதல் சுவரொட்டி உருவாக்கம் மன மூலக்கூறு போட்டி நெருப்பற்ற சமையல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல் காந்திகிராமம் ரூரல் இன்ஸ்டிடியூட் திருச்சி ஜமால் முகமது கல்லூரி கரூர் என்எஸ்என் பொறியியல் கல்லூரி பண்டுதகாரன்புதூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்று பரிசுகளை வென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய திருச்சி ஜமால் முகமது கல்லூரி ஒட்டு மொத்த சாம்பியன் விருதைப் பெற்றது. காந்திகிராமம் ரூரல் இன்ஸ்டிடியூட் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை வேதியியல் துறைத்தலைவர் இலக்கியா மற்றும் துறைப்பேராசிரியர்கள் இணைந்து நடத்தினர்.