கரூர் ஜெய்ராம்ஸ் கலை அறிவியல் கல்லூரியில் காமர்ஸ் சிஏ துறை சார்பில் காமர்ஸ் பஜார் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் தங்களின் வியாபாரத் திறன் படைப்பாற்றல், வணிக யோசனைகள் மற்றும் தொழில்முனைவோர் முதலான திறன்களை வெளிப்படுத்தினர்.
புதுமையான பொருட்களைச் சந்தைப்படுத்துதல் பொருட்கள் பதுமையான கைவினைப் பொருட்களைத் தயாரித்துக் காட்சிப்படுத்துதல் வியாபார தொழில்நுட்பங்களுடன்பல்வேறு கடைகளை அமைத்து ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த சந்தைப்படுத்துதல் மூலம் விற்பனையாளர் வாடிக்கையாளர் தொடர்பு ஆகியவற்றைக் கற்றுக்கொண்டனர்.
மாணவ மாணவியர்கள் அதிக எண்ணிக்கையில் கடைகளை அமைத்திருந்தனர்.
இந்த சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை நிகழ்ச்சியை கல்லூரி தாளாளர் பொறியாளர் ராமசாமி ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் லட்சுமணசிங் கல்லூரி நிர்வாக இயக்குநர் சிவகாமி பிஆர்ஓ முத்துசாமி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். மாணவ மாணவியர்களை காமர்ஸ் சிஏ துறைத்தலைவர் பாக்கியராஜ் மற்றும் துறைப்பேராசிரியர்கள் ஆர்வமாகப் பங்கேற்க வைத்தனர். குறைவான முதலீடு செய்து விற்பனை வாயிலாக அதிக இலாபம் ஈட்டிய குழுவினருக்குப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.