Event Information

கரூர் ஜெய்ராம்ஸ் கல்லூரியில் 77ஆவது குடியரசு தினவிழா.
Event Date

26-01-2026

Event Location

JASC Karur

Organized by

NATIONAL CADET CORPS Department

About The Event

கரூர் ஜெயராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 77 வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கல்லூரி தாளாளர் பொறியாளர் ராமசாமி அவர்கள் கொடியேற்றி உரையாற்றினார். தனது உரையில் இந்திய விடுதலைக்காக உழைத்த தியாகிகளையும் அவர்கள் இந்தியத் திருநாட்டின் குடியாட்சி உரிமையைப் பெற போராடிய நிகழ்வுகளையும் குறிப்பிட்டார்.
இன்றைய இளைஞர்கள் இந்தியாவின் வரலாற்றை நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் இந்தியாவினுடைய பாதுகாப்பு அம்சங்கள் உலக அரங்கில் இந்தியா பெற்றுள்ள அங்கீகாரம் முதலானவை குடியாட்சி வாயிலாகவே பெறப்பட்டது என்பதை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். ஆங்கிலேய அடக்குமுறைகள் பற்றியும் சுதந்திர இந்தியாவின் சுவாசக் காற்றை நாம் சுவாசிப்பதற்கு தியாகிகள் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் வெற்றிகளையும் தனது உரையில் கூறினார். கல்லூரியில் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படையின் அணிவகுப்பினை தாளாளர் ஏற்றுக்கொண்டார்.
இந்த குடியரசு தினவிழாவில் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் முனைவர் லட்சுமணசிங் நிர்வாக இயக்குனர் சிவகாமி சக்திவேல் தேசிய மாணவர் படை லெப்டினென்ட் வடிவேல் பிஆர்ஓ முத்துசாமி மற்றும் கல்லூரியில் பணியாற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். குடியரசு தின விழா நிகழ்வுகளை வணிகக் கணினிப்பயன்பாட்டியல் துறை உதவிப் பேராசிரியர் ஜெசிமா யாஸ்மின் தொகுத்து வழங்கினார்.